ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை உயரும் அபாயம்

ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விநியோகத்தை கட்டுப்படுத்தும் ஒபெக் உறுப்பு நாடுகளின் முடிவால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

தற்போது ஒரு லீற்றர் பெற்றோலின் தேசிய விலை 1.86 டொலர்களாகும்.

இது ஜனவரியில் 1.73 டொலரில் இருந்து 13 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சந்தை தரவு அறிக்கைகள் காட்டுகின்றன.

தற்போது சிட்னியில்தான் பெட்ரோல் விலை அதிகபட்சமாக பதிவாகி உள்ளது.

பல பகுதிகளில் பெற்றோல் விலை 02 டொலர்களை தாண்டியுள்ளதுடன் சில இடங்களில் பெற்றோல் விலை 2.11 டொலர்களை எட்டியுள்ளது.

எதிர்வரும் ஈஸ்டர் வாரத்தில் தேவை அதிகரிப்புடன் பெட்ரோல் விலையில் அதிகரிப்பு ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய தேசிய சாலை மற்றும் போக்குவரத்து ஓட்டுநர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, ANZAC வார இறுதி வரை பெட்ரோல் விலையில் எந்தக் குறைப்பும் இருக்காது.

(Visited 6 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித