அமெரிக்காவை உலுக்கிய சூறாவளி – 20க்கும் அதிகமானோர் மரணம்
அமெரிக்காவை உலுக்கிய கடுமையான சூறாவளியால் மழையில் சிக்கி 21 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் காயமடைந்தனர்.
தெற்கு, மத்திய மேற்குப் பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்திய சூறாவளி கிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இடிபாடுகளுக்குள்ளே தேடல் தொடர்வதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.
அர்க்கன்ஸா (Arkansas), அலபாமா (Alabama), இலனோய் (Illinois), இண்டியானா (Indiana) உள்ளிட்ட 6 மாநிலங்களில் சூறாவளி சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அர்க்கன்ஸா மாநிலத்தில் சூறாவளியில் சிக்கி மூவர் உயிரிழந்தனர். 20க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இண்டியானாவில் மேலும் மூவர் உயிரிழந்தனர்.
இலனோயில் ஒரு திரையரங்கின் கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். அப்போது சுமார் 260 பேர் திரையரங்கின் உள்ளே இருந்தனர்.
15 மில்லியன் பேர் வசிக்கும் டெக்ஸஸிலிருந்து (Texas) விஸ்கோன்சின் (Wisconsin) வரை சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிகாகோ, டெனஸ்ஸி, இண்டியானாபொலிஸ் (Chicago, Tennessee, Indianapolis) ஆகிய நகரங்களையும் சூறாவளி கடந்து செல்லக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.