அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கனமழையும் பலத்த காற்றும் வீசி கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பசிபிக் பகுதியிலிருந்து மற்றொரு சக்திவாய்ந்த புயல் தாக்கியதால் மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அதில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் சான் பிரான்சிஸ்கோவின் தெற்கே உள்ள பஜாரோ (Pajaro) நதிக்கரை அருகே வசித்த குடியிருப்பாளர்.
கரை உடைந்ததால் அவர் தமது வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்.
சான் பிரான்சிஸ்கோவின் முக்கிய நெடுஞ்சாலைகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அண்மை வாரங்களாக கலிபோர்னியா மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது.