அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலம் முழுவதும் புயல், சூறாவளி வீசியதில் குறைந்தது 23 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் வீசிய சக்திவாய்ந்த புயல் மற்றும் சூறாவளி காரணமாக குறைந்தது 23 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு ஏற்பட்ட சூறாவளி காரணமாக 23 பேர் இறந்ததாகவும், பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை நான்கு பேர் காணவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று மிசிசிப்பி அவசரநிலை மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, இந்த எண்ணிக்கை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அனர்த்தத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியில், ஏராளமான உள்ளூர் மற்றும் மாநில தேடல் மற்றும் மீட்பு குழுக்கள் இபணியாற்றி வருகின்றன.
கடந்த வெள்ளியன்று இரவு மிசிசிப்பியில் இடியுடன் கூடிய மழை பெய்ததுடன், சில்வர் சிட்டி மற்றும் ரோலிங் ஃபோர்க் பகுதியில் ஒரு சூறாவளி பதிவாகியுள்ளது என்று அமெரிக்க தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது.