அரசியல் இலங்கை செய்தி

முழு குடும்பத்தையும் சிறையில் அடைக்க முயற்சி: FCID யில் ஆஜர் ஆக முன் ஜொன்ஸ்டன் கதறல்!

“ நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. எனது குடும்பத்தை சிறை வைப்பதற்குரிய அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையே இது.” – என்று முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ Johnston Fernando தெரிவித்தார்.

எப்.பி.ஐ.டி FCID எனப்படும் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (5) முன்னிலையாவதற்கு முன்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“வாக்குமூலம் பெறுவதற்கு வருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமையவே சிஐடி வந்தேன். நேற்றுதான் அறிவித்தல் கிடைக்கப்பெற்று வந்தது. இதற்கு முன்னர் அறிவித்தல் விடுக்கப்படவில்லை.

எதற்காக வாக்குமூலம் பெறப்படுகின்றது என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.

எனக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. நான் அஞ்சப்போவதில்லை. பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்வேன். நீதி கிடைக்கும் என நம்புகின்றேன்;.” – என்றார் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ.

அதேவேளை, முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவின் மகனும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சதொக நிறுவனத்தின் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பிலேயே நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது என தெரியவருகின்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!