அரசியல் இலங்கை செய்தி

மஹிந்தவின் சகா ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது: பின்னணி என்ன?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ Johnston Fernando இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச வளங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் FCID அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று எப்.சி.ஐ.டிக்கு ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ வரவழைக்கப்பட்டிருந்தார்.

வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னரே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சதொசவுக்கு லொறி உள்ளிட்ட வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜொன்ஸ்டர் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ வும் கைது செய்யப்பட்டுள்ளார்.

எப்.சி.ஐ.டியினரால் கடந்த 30 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர், ஜனவரி 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, வாக்குமூலம் வழங்குவதற்கு செல்வதற்கு முன்னர், தனக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை இடம்பெறுகின்றது என ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ குற்றஞ்சாட்டி இருந்தார்.

அச்சுறுத்தல்களுக்கு தான் அடிபணியபோவதில்லை எனவும்,சட்ட ரீதியாக சவால் எதிர்கொள்ளப்படும் எனவும் அறிவிப்பு விடுத்திருந்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!