தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்திப் பயணம் திருக்கோவிலில் ஆரம்பம்!

தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்திப் பயணமானது இன்று (15.09) திருக்கோவில் பிரதேசத்தில் ஆரம்பமானது.
தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயணம் திருக்கோவிலில் இருந்து பொத்துவில் நோக்கிச் சென்று ஆலையடிவேம்பு, காரைதீவு, வளத்தாப்பிட்டி, வீரமுனை, கல்முனை மற்றும் பாண்டிருப்பு ஆகிய அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதேசமெங்கும் பயணத்தினை முன்னெடுத்து குறித்த பிரதேசங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கபடவுள்ளன.
அதனைத் தொடர்ந்து, இந்த ஊர்தியானது மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி நகரவுள்ளதுடன் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயணம் மேற்கொண்டு இறுதியாக திலீபனின் நினைவேந்தல் தினத்தன்று யாழ். நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் பயணத்தை நிறைவு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.