அமெரிக்காவில் பரபரப்பு – பாடசாலையொன்றில் 3 சிறார்கள் உட்பட அறுவர் சுட்டுக்கொலை
அமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில் மூன்று சிறுவர்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்
அமெரிக்கா வின் டென்னசி மாநிலத்தின் நாஷ்வில்லில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
பலியான மாணவர்கள் மூவரும் 9 வயதானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் 61 வயதுடைய இருவரும் 60 வயதான ஒருவரும் உயிரிழந்ததாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 28 வயதான அவர், பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார்.
இந்தநிலையில் துப்பாக்கி வன்முறை மீது நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க காங்கிரஸுக்கு அந்த நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
(Visited 11 times, 1 visits today)





