புடின் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு அரசியலில் களமிறங்கவுள்ள யூலியா நவல்னயா
மறைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மனைவியான யூலியா நவல்னயா, ரஷ்யாவுக்குத் திரும்பி, விளாடிமிர் புடினின் ஆட்சி முடிந்தவுடன் அரசியல் பதவிக்கு போட்டியிடுவேன் என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
புடினின் முக்கிய அரசியல் எதிரியாகத் தொடர்ந்து பிப்ரவரியில் தெளிவற்ற சூழ்நிலையில் ஆர்க்டிக் சிறையில் அலெக்ஸி நவல்னி இறந்தார்,
நவல்னயா மேலும் அவரது கணவரின் வேலையைத் தொடர உறுதியளித்தார்.
“ரஷ்யாவில் வாழ விரும்புகிறேன். நான் பிறந்தது மாஸ்கோவில், எங்கள் குழந்தைகள் மாஸ்கோவில் பிறந்தார்கள்.நிச்சயமாக, புடின் ஆட்சியில் இருக்கும்போது அது சாத்தியமில்லை, ஆனால் ஒரு நாள் இந்த ஆட்சி கவிழ்ந்து மீண்டும் வருவேன் என்று நம்புகிறேன்” என்று நவல்னயா தெரிவித்துள்ளார்.
“நான் ரஷ்யாவுக்குத் திரும்பினால் தேர்தலில் வேட்பாளராகப் பங்கேற்பேன்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
“எனது அரசியல் எதிரி விளாடிமிர் புடின், விரைவில் அவரது ஆட்சியை வீழ்த்த நான் எல்லாவற்றையும் செய்வேன்.”
48 வயதான நவல்னயா, தனது கணவரின் மரணத்திற்கு சர்வதேச சமூகத்தின் பதிலை “ஒரு நகைச்சுவை” என்றும், புடினைப் பற்றி “கொஞ்சம் பயப்பட வேண்டாம்” என்றும் வலியுறுத்தினார்.
ஜேர்மனியில் பல வருடங்களாகத் தங்கியிருந்த நவல்னயாவை ஜூலை மாதம் ரஷ்யா தனது “பயங்கரவாதிகள்” மற்றும் “தீவிரவாதிகள்” பட்டியலில் சேர்த்தது.