கொழும்பில் மர்மமாக உயிரிழந்த இளம் பெண் – வாடகை வீட்டில் நடந்த சம்பவம்
பத்தரமுல்ல பிரதேசத்தில் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
பத்தரமுல்ல பிரதேசத்தில் பிரதேசத்தில் பாதி கட்டி முடிக்கப்பட்ட இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தின் பாதுகாப்பற்ற பகுதியிலிருந்து திருமணமாகாத பட்டதாரி பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றிய நிவித்திகல, கல்லகே மண்டிய பிரதேசத்தை சேர்ந்த ஹன்சனி பாக்யா ஜயதிலக்க என்ற 30 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் மேலும் மூன்று பெண்களுடன் சம்பத் பிளேஸ், பத்தரமுல்லை பிரதான வீதியிலுள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் பகுதியில் தற்காலிகமாகத் தங்கியிருப்பதுடன், கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.40 மணியளவில் வேலை முடிந்து வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. .
அவருடன் அறையில் வசிக்கும் நிலப் பதிவாளர் அலுவலகத்தைச் சேர்ந்த அவருடைய நண்பியும்வேலை முடிந்து வந்திருந்தார். ஹன்சனி நண்பியை அழைத்து, இரவு உணவிற்கு கொண்டு வந்த இறாலை தயார் செய்வதாகக் கூறினார்.
இதற்கிடையில், குளியலறைக்கு நண்பிக்கு மேல் தளத்தில் இருந்து யாரோ கீழே விழும் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது அது தனது நண்பி என தெரியவ்நதுள்ளது.
அவரது இடது காது மற்றும் மூக்கில் இருந்து இரத்தம் வழிவதைக் கண்ட நண்பி மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
எனினும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஹன்சினி நேற்று முன்தினம் மதியம் உயிரிழந்துள்ளார்.
இறால் எச்சங்களை மேல் தளத்தின் பின்பகுதியில் உள்ள கொள்கலனில் வைக்கச் சென்ற போது உயிரிழந்த பெண் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பட்டதாரியான ஹன்சினி அவரது குடும்பத்தில் மூன்றாவது மகளாவார். முன்னர் காணி பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்ததாகவும், சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பணிபுரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.