ஜெர்மனி சாரதிகளுக்கு எச்சரிக்கை – அமுலாகும் சட்டம்

ஜெர்மனியில் வாகனங்களின் டயர்கள் தொடர்பில் அமுல்படுத்தப்படவுள்ள நடைமுறைகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, அடுத்த மாதம் முதலாம் திகதியில் இருந்து பல புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
வாகனங்ளை செலுத்தும் போது வாகனங்களுக்குரிய டயர்களில் அல்பி என்ற குறியீடு இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமாக m + s என்ற குறியீடு இருந்ததாகவும், குறித்த எஸ் குறியீடுக்கு பதிலாக அல்பி என்ற குறியீடு கட்டாயமாக வேண்டும் எனவும் புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது.
குளிர்கால டயர்களுக்கான புதிய விதிமுறைகளுக்கமைய, இந்த நடைமுறைக்கு வரும். அல்பி சின்னம் கொண்ட மாடல்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். காலாவதியான M+S டயர்களுடன் பயணிக்கும் வாகனங்கள் அபராதம் மற்றும் புள்ளிகளை விளைவிக்கலாம்.
குளிர்கால பயன்பாட்டிற்கு ஏற்றதாகக் கருதப்படுவதற்கு குளிர்காலம் மற்றும் அனைத்து காலத்திற்கும் டயர்கள் அல்பி சின்னத்தைக் கொண்டிருக்க வேண்டும்.