பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை – 7 மணிக்கு முன்னர் ஜன்னல்களை மூடுமாறு அறிவுறுத்தல்

பிரித்தானியாவில் வெப்பஅலை முடிவடைந்து குளிர்ச்சியான பருவம் தொடங்குவதையொட்டி, வீட்டுக்குள்சிலந்திகள் புகும் பருவம் நெருங்கி வந்துள்ளது.
இதனால், மாலை 7 மணிக்கு முன் ஜன்னல்களை மூட மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
சிலந்திகள், குறிப்பாக ஆண் சிலந்திகள், ஜோடி தேடி நடமாடும் இந்த காலத்தில் திறந்த ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வழியாக வீட்டுக்குள் நுழைவது இயல்பானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சிலந்திகள் பெரும்பாலும் ஆபத்தானவை அல்ல. ஆனால், சில நேரங்களில் கடிப்பது வலி, வீக்கம், அரிதாக காய்ச்சலையும் ஏற்படுத்தலாம்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
ஜன்னல்கள், கதவுகளில் இடைவெளிகள் மற்றும் விரிசல்கள் சரிபார்க்கவும்
சிலந்திகளை விரட்ட நறுமண எண்ணெய்கள் கலந்து தெளிக்கலாம்
வீடுகளை சுத்தமாக வைத்திருக்கவும்
சிலந்திகள் புகுந்தால், கண்ணாடி மற்றும் காகிதத்தின் உதவியுடன் அவற்றை மனிதநேயமாக அகற்றலாம்