இஸ்ரேலில் பாதசாரிகள் மீது மோதிய வாகனம் – ஏழு பேர் காயம்

வடக்கு இஸ்ரேலில் பாதசாரிகள் மீது ஒரு வாகனம் மோதியதில், “சந்தேகத்திற்குரிய பயங்கரவாத தாக்குதல்” என்று போலீசார் விவரித்தனர்.
இதில் குறைந்தது ஏழு பேர் காயமடைந்தனர் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
“இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. ஹைஃபா நகரின் தெற்கே உள்ள கர்கூர் சந்திப்பில், சந்தேகத்திற்கிடமான வாகனத்தை காவல்துறை வழிமறித்து, மோதலுக்கு காரணமானதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை கைது செய்தது” என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் ஏழு பேர் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)