இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – வெற்றியாளரை தேர்வு செய்த நீர்யானை

அமெரிக்க ஜனாதிபதி தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு இருவரும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்த நிலையில், நேற்று தங்களுடைய இறுதி பிரச்சாரத்தை முடித்தனர்.

இன்று மாலை 5.30 மணி முதல் (இலங்கை, இந்திய நேரப்படி) தொடங்கி நாளை அதிகாலை 5.30 மணி வரையில் தேர்தல் நடைபெறுகிறது.

அமெரிக்க நேரப்படி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும்.

இந்த சூழலில், யார் அமெரிக்கத் தேர்தலில் யார் வெற்றிபெறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அமெரிக்க மக்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது. இதுவரை, நடைபெற்ற கருத்துக் கணிப்பில் ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸுக்கு ஆதரவு பெருகி வந்தது. ஆனால், நேற்று அமெரிக்காவில் முக்கியமான ஒரு 7 மாகாணங்களில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்ப்க்கு ஆதரவு பெருகி இருப்பதாகவும் தெரியவந்தது.

இதனையடுத்து, 2024 ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பதை நீர்யானை ஒன்று தேர்ந்தெடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஜூலை மாதம் பிறந்த தாய்லாந்தின் பிரபலமான பிக்மி நீர்யானை ஒன்றிடம் மிருகக்காட்சிசாலையில் வைத்து இரண்டு கேக்குகள் வழங்கப்பட்டது. அதில், ஒரு கேக்கில் கமலா ஹாரிஸ் பெயரும், மற்றொரு கேக்கில் டொனால்ட் டிரம்ப்பு பெயரும் எழுதப்பட்டு இருந்தது.

இந்த இரண்டு கேக்குகளில் அந்த நீர்யானை எந்த கேக்கை முதலில் சாப்பிடுகிறதோ அந்த கேக்கில் எழுதி இருப்பவரின் பெயர் தான் வெற்றியாளர் எனக் கூறி காட்டப்பட்டது.

அப்போது அந்த நீர் யானை டொனால்ட் டிரம்ப்பு பெயர் எழுதி வைத்திருந்த கேக்கை சாப்பிட்டது. எனவே, அமெரிக்க தேர்தலில் வெற்றியாளர் டொனால்ட் டிரம்ப்பு தான் என அவருடைய ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள். இதனால், இந்த மாதிரி மூட நம்பிக்கையை நம்ப வேண்டாம் எனக் கமலா ஹாரிஷ் ஆதரவாளர்கள் மற்றொரு பக்கம் கூறி வருகிறார்கள்.

https://x.com/TheInsiderPaper/status/1853510917583249504

 

(Visited 22 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி