ஆப்பிரிக்கா

மத்திய கிழக்கு காங்கோவில் இரு தென்னாப்பரிக்க வீரர்கள் உயிரிழப்பு!

மத்தியில் கிழக்கு காங்கோவில் மோட்டார் வாகனம் ஒன்று தீப்பற்றியதில்  இரு தென்னாப்பிரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தென்னாப்பிரிக்க ஆயுதப்படையினர்  தெரிவித்துள்ளனர்.

நாட்டின் அனைத்து ஆயுதப் படைகளையும் மேற்பார்வையிடும் தென்னாப்பிரிக்க தேசிய பாதுகாப்புப் படை மோட்டார் வாகனத்திற்கு வேண்டுமென்று தீவைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கிழக்கில் ஆயுதமேந்திய கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராகப் போராடும் தென்னாப்பிரிக்க அபிவிருத்திச் சமூகத்தின் பணியின் ஒரு பகுதியாக தென்னாப்பிரிக்கா காங்கோவுக்கு வீரர்களை அனுப்பியுள்ளது.

தென்னாப்பிரிக்கா இந்த வாரம் கிழக்கு காங்கோவிற்கு 2,900 வீரர்களைக் கொண்ட புதிய படையை அனுப்புவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு