இந்தோனேசியாவில் ரயில்கள் மோதி விபத்து

இந்தோனேசியாவின் ஜாவா நகருக்கு கிழக்கே அமைந்துள்ள ரன்சேகெக் மாவட்டத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த பயணிகளின் எண்ணிக்கை 28 என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் உடைந்துள்ளதாகவும், சில ரயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே விழுந்து அருகிலுள்ள வயல்வெளியில் விழுந்ததாகவும், அந்த பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விபத்து ஏற்படும் போது ரயிலில் 478 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
(Visited 21 times, 1 visits today)