அநுராதபுரத்திற்கும் – ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!
அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் சனிக்கிழமை (15) மீண்டும் ஆரம்பிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் பாதை புனரமைப்புக்காக குறித்த சேவை தற்காலிகமாக நிறுத்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்திய கடன் உதவி திட்டத்தின் கீழ் 33 பில்லியன் ரூபாய் செலவில் குறித்த பாதை மீளவும் புனரமைக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் மணிக்க 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் என ரயில்வே திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில்களுக்கான ஆசன முன்பதிவு சேவையும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)





