உலகம் செய்தி

நெதன்யாகு வீட்டில் குண்டுவீச்சு; மூன்று பேர் கைது

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிசேரியாவில் உள்ள நெதன்யாகுவின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

எனினும் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த மேலதிக தகவல்களை இஸ்ரேல் பொலிஸார் வெளியிடவில்லை.

தாக்குதலில் வீடு சேதமடையவில்லை. தாக்குதல் நடந்தபோது நெதன்யாகு வீட்டில் இல்லை.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் அரசியல் வட்டாரங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

எதிர்கட்சித் தலைவர் Yair Lapid மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு தலைவர் Benny Gantz ஆகியோர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் அதிபர் ஹெர்சாக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதல் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

(Visited 14 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி