மறைந்த ஹிஸ்புல்லா தலைவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர்

கடந்த செப்டம்பரில் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹெஸ்பொல்லாவின் மறைந்த தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்கு லெபனானில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக தாமதப்படுத்தப்பட்ட பொது இறுதிச் சடங்கு,பெய்ரூட்டின் காமில் சாமவுன் ஸ்போர்ட்ஸ் சிட்டி ஸ்டேடியத்தில் நடைபெற்றது
தொலைக்காட்சி உரையில், ஹெஸ்பொல்லா தலைவர் நைம் காஸ்ஸெம், குழு நஸ்ரல்லாவின் பாதையைப் பின்பற்றும் என்று குறிப்பிட்டார்.
“நாங்கள் நம்பிக்கையை நிலைநிறுத்தி இந்தப் பாதையில் நடப்போம், உங்கள் விருப்பத்தை நாங்கள் நிலைநிறுத்துவோம்,” என்று காஸ்ஸெம் நஸ்ரல்லாவைப் பற்றிக் தெரிவித்தார்.
(Visited 2 times, 2 visits today)