மருந்துகள் இல்லை என திருப்பி அனுப்பப்படும் அவல நிலை
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் தமிழகத்திலே அதிக சாலை விபத்துகள் ஏற்பட்டு வரும் முக்கிய இடமாக கருத்தப்படுகிறது.
சூளகிரியில் ஏற்படும் விபத்துகளில் இருந்து பொதுமக்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க 2021 ஆண்டு 24 மணி நேர அவசர சிகிச்சை மையம் திறக்கப்பட்டது.
அன்று முதல் தற்போது வரை 4 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட விபத்தில் காயம் அடைந்தவர்கள், மற்றும் தற்க்கொலைக்கு முயற்சி செய்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு இந்த மையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இந்த மையத்திற்க்கு அவசர சிகிச்சைக்காக வருபவர்களை மருந்துகள் இல்லை என பாதிக்கப்பட்டவர்களை திரும்பி அனுப்பப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு மீண்டும் செயல்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.