Site icon Tamil News

பறந்துகொண்டிருந்த போது திடீரென 15 ஆயிரம் அடி கீழே இறங்கிய விமானம்

அமெரிக்காவின் விமானம் 3 நிமிடங்களில் 15,000 அடி கீழே இறங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவ்வாறு விமானம் தரையிறங்கிய போது பயணிகள் ‘பயங்கரமான’ அனுபவத்தை எதிர்நோக்க நேரிட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் பறந்துகொண்டிருந்த போது உள்ளே அழுத்தம் பிரச்சனை பற்றி சில எச்சரிக்கைகளை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கெய்ன்ஸ்வில்லியில் உள்ள உள்ளூர் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Fox News இன் அறிக்கையின்படி, புளோரிடாவிற்கு சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூன்று நிமிடங்களில் 15,000 அடிக்கு மேல் தரையிறங்கியுள்ளது.

இது அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் உள்ள சார்லோட்டிலிருந்து புளோரிடாவின் கெய்னெஸ்வில்லிக்கு பயணித்துள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட அழுத்தம் பிரச்சினை காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

புளோரிடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹாரிசன் ஹோவ், விமானத்தில் அவர் எதிர்கொண்ட நிலைமை குறித்து தனது சமூக ஊடகங்களில் குறிப்புகளை வெளியிட்டிருந்தார்.

“நான் நிறைய பறந்துவிட்டேன். இது பயங்கரமானது. எங்கள் அற்புதமான விமானக் குழுவினருக்கு-கேபின் குழுவினர் மற்றும் விமானிகளுக்குப் பாராட்டுகள்….”

விமானம் 11 நிமிடங்களில் சுமார் 20,000 அடிகள் கீழே இறங்கியதாக Flightaware தரவுகள் காட்டுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version