உக்ரேன் போரால் உலகளவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு
உக்ரேன் – ரஷ்ய போர் காரணமாக உலகம் பாதுகாப்பு செய்யும் செலவு வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
30 ஆண்டுக்கு முன் அமெரிக்காவுக்கும் அன்றைய சோவியத் யூனியனுக்கும் இடையே நிலவிய கெடுபிடிப் போர் முடிவுக்கு வந்தது.
அதன் பிறகு கடந்த ஆண்டுதான் ராணுவத்துக்காகச் செய்யப்படும் செலவு மிக அதிகமாக உயர்ந்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
ஸ்வீடனில் இயங்கும் அனைத்துலக அமைதி ஆய்வு நிலையம் இதனை கூறியுள்ளது.
உலக ராணுவச் செலவு மூன்று புள்ளி ஏழு விழுக்காடு அதிகரித்தது. கடந்த ஆண்டு ஈராயிரத்து இருநூற்று நாற்பதாயிரம் பில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் திகதி ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்தது. அதன் பிறகு ஐரோப்பிய நாடுகள் தற்காப்பை வலுப்படுத்தும் ஓட்டத்தில் இறங்கின.
உக்ரேன் கடந்த ஆண்டு ராணுவத்துக்காகச் செய்த செலவு 640 விழுக்காடு அதிகரித்தது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் செய்த ராணுவ உதவி இல்லாமல் உக்ரேன் மட்டும் செய்த செலவு இதுவாகும்.