நாடு பிளவுபட்டதன் காரணமாகவே ஈஸ்டர் தாக்குதல் நடந்தது – அனுர
இலங்கையில் இனவாதத்திற்குப் பதிலாக புதிய தேசிய ஐக்கிய அரசியல் ஸ்தாபிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
1947ல் சுதந்திரம் பெற்ற இந்தியா, பல்வேறு மொழிகளைப் பேசும், பல்வேறு மதங்களை நம்பி, பிராந்திய ரீதியாக பிளவுபட்ட ஒரு மாநிலமாக இருந்தது, ஆனால் இந்தியாவின் தேசிய தலைவர்கள் மக்களை ஒரே கொடியின் கீழ் கொண்டு வர முயற்சித்தார்கள்.
அதன் விளைவாக அப்துல் கலாம் போன்ற ஒருவர் ஜனாதிபதியானார், மனமோகன் சிங் போன்ற ஒருவர் தான் பிரதமரானார் என்றும், ஜாதி இல்லாத பெண் ஜனாதிபதியானார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் லண்டனில் நடைபெற்ற இலங்கைப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எனினும் 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இலங்கையில் 1948 ஆம் ஆண்டிற்குப் பின்னரும் பிரிவினை அரசியல் இருந்ததாகவும், இதன் விளைவாக 30 வருடகால யுத்தம் இடம்பெற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாகவும் அனுரகுமார திஸாநாயக்க கூறுகிறார்.
அதன் பின்னரான ஈஸ்டர் தாக்குதலும் பிரிவினை அரசியலின் விளைவே என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரிவினை அரசியலை மாற்றி இலங்கையில் இனவாதத்திற்குப் பதிலாக தேசிய ஒருமைப்பாட்டு கொடி பிடிக்கும் புதிய அரசியல் உருவாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.