அக்குறணை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது
கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று (08) பிற்பகல் முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டி யாழ்ப்பாணம் ஏ 09 வீதியில் உள்ள அக்குறணை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அக்குரணை நகரின் ஊடாக பாயும் பிக்க ஓயா மற்றும் வஹகல ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால் அக்குரணை நகரின் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் ஹத்தே கன்வான, குடுகல உள்ளிட்ட பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அக்குறணை வெள்ளத்தில் மூழ்கியதால் கண்டி – யாழ்ப்பாணம் ஏ-09 வீதியின் போக்குவரத்து மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 22 times, 1 visits today)





