ஆசியா

சீனாவுடன் நட்பு பாராட்ட விரும்பும் தைவானின் புதிய ஜனாதிபதி!

தைவானின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட வில்லியம் லாய் சிங்-தே, ஒரு முக்கியமான தேர்தலில் வெற்றிக்கு பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்.   சுயராஜ்ய தீவு “ஜனநாயகத்தின் பக்கம் நிற்கும்” என்று கூறினார். அத்துடன்  ஜனநாயகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியதற்காக தைவான் மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

ஜனநாயகத்திற்கும் எதேச்சதிகாரத்திற்கும் இடையில், நாங்கள் ஜனநாயகத்தின் பக்கம் நிற்போம் என்பதை சர்வதேச சமூகத்திடம் கூறுகிறோம் என்றும்,  சுயராஜ்ய தீவு, அதன் தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளைத் தடுக்க முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

“இந்த தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் வெளி சக்திகளின் முயற்சிகளை தைவான் மக்கள் வெற்றிகரமாக எதிர்த்துள்ளனர் என்று சீனாவை சாடிய அவர்,  நாங்கள் சீனாவுடன் எதிரிகளாக மாற விரும்பவில்லை, நாங்கள் நண்பர்களாகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்  தைவானை தொடர்ந்து அச்சுறுத்தல்களில்  இருந்து பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் எனக் கூறிய அவர், சீனாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி, தைவான் ஜலசந்தியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேண தான் செயற்படுவேன் என உறுதியளித்துள்ளார்.

ஆனால், “சீனாவின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் மற்றும் மிரட்டலில் இருந்து தைவானை நான் பாதுகாப்பேன்” என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்திகளுக்கு ……….!

தைவானின் புதிய ஜனாதிபதியாக வில்லியம் லாய் சிங்- தே தெரிவு!

 

 

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!