முழு குடும்பத்தையும் சிறையில் அடைக்க முயற்சி: FCID யில் ஆஜர் ஆக முன் ஜொன்ஸ்டன் கதறல்!
“ நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. எனது குடும்பத்தை சிறை வைப்பதற்குரிய அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையே இது.” – என்று முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ Johnston Fernando தெரிவித்தார். எப்.பி.ஐ.டி FCID எனப்படும் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (5) முன்னிலையாவதற்கு முன்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “வாக்குமூலம் பெறுவதற்கு வருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமையவே சிஐடி வந்தேன். நேற்றுதான் அறிவித்தல் கிடைக்கப்பெற்று வந்தது. இதற்கு முன்னர் அறிவித்தல் […]




