டி20 உலகக் கோப்பை – வங்கதேச அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை
வங்கதேச(Bangladesh) இடைக்கால அரசாங்கம், வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026 போட்டிகளுக்கான இடத்தை மாற்றக் கோருமாறு அறிவுறுத்தியுள்ளது என்று விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல்(Asif Nasrul) தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு முறையாகத் தெரிவிக்கவும், போட்டியில் வங்கதேசத்தின் போட்டிகளுக்கான மாற்று இடமாக இலங்கையை முன்மொழியவும் இடைக்கால அரசாங்கம் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானின்(Mustafizur Rahman) ஒப்பந்தத்தை ரத்து செய்ய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(Kolkata Knight Riders) அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம்(BCCI) உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு மத்தியில் இந்திய கிரிக்கெட் வாரியம், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரியது.
இதனை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவை ஏற்று முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்தது.
வங்கதேசம் டி20 உலகக் கோப்பை தொடரில் பிப்ரவரி 7ம் திகதி கொல்கத்தாவின்(Kolkata) ஈடன் கார்டன்ஸில்(Eden Gardens) மேற்கிந்தியத் தீவுகளை(West Indies) எதிர்கொள்கிறது.





