ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கையர்!!! 6700 யூரோ அபராதம்

பிரான்ஸில் சட்டவிரோதமான முறையில் பெருந்தொகை மதுபான போத்தகல்களை கொண்டு சென்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சுங்க பிரிவினால் இலங்கையருக்கு எதிராக 6700 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது வாகனத்திற்குள் 280 லிட்டர் கொள்ளளவு கொண்ட 57 மதுபானங்களை வைத்திருந்தாக சந்தேகநபர் மீது குற்றம் சாட்டப்பட்டள்ளது.

பிரான்ஸிலுள்ள வர்த்தக நிலையத்தில் விற்பனை செய்யும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை கொண்டு வந்ததாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சுங்க பிரிவினால் 6700 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(Visited 10 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி