இலங்கை

இலங்கை: கண்டி மக்களை அச்சுறுத்தும் தொற்று நோய்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கண்டி நகர எல்லையினுள் முக்கிய தொற்று நோய் அச்சுறுத்தல் டெங்கு அல்ல காசநோய் என்று கண்டியின் பிரதான மாநகர வைத்திய அதிகாரி பசன் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை கண்டி நகரில் 50 காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளது.

டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு 06 நாட்களுக்குள் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டாலும் 06 மாதங்கள் ஆனாலும் காசநோயாளிகளை இனங்காண முடியாது என கண்டி பிரதான மாநகர வைத்திய அதிகாரி பசன் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இருமல், சளி, பசியின்மை, உடல்சோர்வு போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் குறுகிய கால சிகிச்சையைப் பெறுவதன் மூலம் நேரடியாக காசநோய்க்கு சிகிச்சை பெற முடியாது எனவும் இந்நோய் மேலும் பரவ வாய்ப்புள்ளதாக வைத்தியர் ஜெயசிங்க மேலும் தெரிவித்தார்.

கண்டி நகரைச் சுற்றி காசநோய் நிலைமை அதிகமாக காணப்படுவதால், மக்கள் முடிந்தவரை பாதுகாப்பாக இருக்க விழிப்புடன் இருக்க வேண்டுமென கண்டி பிரதான மாநகர வைத்திய அதிகாரி பசன் ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!