வாழ்வியல்

நம் கண்களை பராமரிக்க இலகுவான வழிமுறைகள்!

வேகமான வாழ்க்கை முறையில் உடலில் பல பாகங்களை குறித்த விழிப்புணர்வு இருந்தாலும் கண் ஆரோக்கியத்தை பொறுத்தவரை அதில் பெரிய பிரச்சனையை வந்தால் மட்டுமே அதை கண்டு கொள்கிறோம். எனவே இந்தப் பகுதியில் கண்களை எவ்வாறு பராமரிப்பது மற்றும் கண் கோளாறுகளை குறைக்கக்கூடிய உணவு முறைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.

இன்றைய நவீன காலத்தில் கண்களுக்கு மிக அதிகமான வேலை கொடுக்கிறோம். குறிப்பாக செல்போன் பார்ப்பது ,லேப்டாப், தொலைக்காட்சி போன்ற மின் சாதன பொருட்களை அதிகமாக பயன்படுத்துகிறோம். இதனால் கண்களில் உள்ள கண்ணீர் சுரப்பி மிக பாதிப்படைகிறது திரவ குறைபாடு, கண் அலர்ஜி ,பார்வை குறைபாடு, கண் வறட்சி போன்றவை ஏற்படுகிறது.

10 eye care tips

வேலையின் நிமித்தம் நீண்ட நேரம் நாம் மின் சாதன பொருள்களை பார்க்கிறோம் என்றால் அதற்கான கண் கண்ணாடி வகைகளை பயன்படுத்த தவற வேண்டாம். இருளில் நீண்ட நேரம் மின் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். கண் ஆரோக்கியத்துக்கு ஒரு என்று ஒரு சில உணவுகள் இருக்கிறது. மீன் கடல் சார்ந்த உணவுகளை பயன்படுத்துவது சிறந்தது அதில் ஒமேகா 3 ஆசிட் அதிகம் உள்ளது.
ஒமேகா 3 ஆசிட் அதிகம் உள்ள பொருள்களான உணவுகளை நாம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் விட்டமின் ஏ அதிகம் நிறைந்த உணவுகளான பப்பாளி ,,கேரட் நம் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் .இது கண் வரட்சியாகாமல் இருக்க உதவுகிறது.

Tips to take care of your eyes | HealthShots

அனைத்து விதமான பச்சை நிற காய்கறிகளில் மல்டி நியூட்ரியன்ட்ஸ் அதிகம் நிறைந்துள்ளது குறிப்பாக பசலைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை அகத்திக்கீரை போன்றவை கண்களுக்கு மிகவும் நல்லது இதை வாரத்திற்கு இருமுறை எடுத்துக் கொள்வது கண்ணிற்கு ஆரோக்கியத்தை தரும்.

முட்டையின் வெள்ளை கருவை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் இது கண் பார்வை திறனை அதிகரிக்கும். மேலும் சிறு தானியங்களையும் உணவில் அடிக்கடி பயன்படுத்த வேண்டும் குறைந்த அளவு கிளைசிமிக் இதில் அதிகம் உள்ளது மேலும் நியாஸின், சிங்க் அதிகம் நிறைந்துள்ளது இது கண் கருவிழி ரெட்டினாவுக்கு மிக ஆரோக்கியமானது.

How to Get Rid of Puffy Eyes

கொட்டை வகைகளில் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் அதிகம் உள்ளது இது கண் ரெட்டினா மற்றும் கார் ணியாவில் உள்ள செல்களுக்கு ஊட்டம் கொடுக்கிறது. அவரை, தட்டை பயறு அதிகம் நம் உணவில் பயன்படுத்த வேண்டும் அவ்வப்போது உணவில் நம் நாட்டு பயிர்களை பயன்படுத்துவது சத்து மாத்திரை எடுத்துக் கொள்வதற்கு சமமாகும்.

வெள்ளரிக்காய்களை துண்டாக நறுக்கி கண்களின் மேல் வைத்தால் கருவளையம் கண் வறட்சி நீங்கும் மேலும் கண்களுக்கு குளிர்ச்சியை தரும். வெள்ளரிக்காய் கிடைக்காவிட்டால் உருளைக்கிழங்கை அதற்கு பதிலாக பயன்படுத்தலாம்.

அடிக்கடி ஐஸ் டூ பை கண்ணிற்கு ஒத்தடம் கொடுக்கலாம். விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை சம அளவு எடுத்து கண்ணைச் சுற்றி இரவு நேரங்களில் போட்டு வரலாம்.

How To Improve Eyesight: 8 Dos and Donts to Improve Your Eyesight - NDTV  Food

விளக்கெண்ணையை கண்மை போடும் இடத்தில் இரவில் தினமும் போட்டு வரவும் இதனால் கண் வறட்சி கருவளையம் வருவதை தடுக்கும். ஆகவே இந்த முறைகளை பயன்படுத்தி கண்களை நாம் கருத்தாக பராமரித்து வர வேண்டும். கண்களுக்கு அதிக ஒளி கொடுக்காமல் பார்த்துக் கொள்வது சிறந்தது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான