பிரான்ஸில் தப்பிச் செல்ல முற்பட்டவர் மீது துப்பாக்கிச்சூடு! வாகனத்தில் பல்லியிரம் யூரோ பணம்

பிரான்ஸில் பொலிஸாரின் கட்டுப்பாட்டை மீறி தப்பிச் செல்ல முற்பட்ட சாரதி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. N6 நெடுஞ்சாலையில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்துக்கு இடமான வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தினர்.
வாகனம் பொலிஸாருக்கு அருகே மெதுவாக வந்து, பின்னர் எதிர்பாராத நேரத்தில் அதிவேகமாக உறுமிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டது. அதையடுத்து பொலிஸார் துப்பாக்கியால் குறித்த வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
வாகனம் சில நூறு மீற்றர் தூரம் பயணித்ததன் பின்னர் நின்றது. சாரதி குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதேவேளை, வாகனத்திற்குள் இருந்து 50,000 யூரோக்கள் வரை ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 15 times, 1 visits today)