உலகம் செய்தி

மாயமான மலேசியாவின் MH370 விமானத்தைத் தேடும் பணி மீண்டும் ஆரம்பம்

காணாமல் போன மலேசியாவின் MH370 விமானத்தை தேடும் பணி மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மலேசியா ஏர்லைன்ஸ் MH370 விமானம் 2014 மார்ச் 8 அன்று கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் சென்றுகொண்டிருந்தபோது காணாமல் போனது.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகால மர்மமான MH370 விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

இதில், முன்பு தேடுதல் பணிகளில் ஈடுபட்ட கடல் ரோபோட்டிக்ஸ் நிறுவனமான ஓஷன் இன்ஃபினிட்டி(Marine robotics firm Ocean Infinity) களமிறங்க உள்ளது.

நீருக்கடியில் இயங்கும் ரோபோட்டிக் வாகனங்களை இயக்கும் மற்றும் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், தெற்கு இந்திய பெருங்கடலில் ஒரு புதிய பகுதியில் தேடுதல் பணிகளை மேற்கொள்ள மலேசிய அரசாங்கத்துடன் கொள்கை அளவில் உடன்பாட்டை எட்டியுள்ளது.

(Visited 12 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி