என்.பி.பி. அரசாங்கம் குறித்து அபாய சங்கு ஊதுகிறார் சரத் வீரசேகர!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு (NPP) மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருந்தாலும், மக்கள் ஆதரவை இழந்துவருகின்றது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார்.
“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு குறைவடைந்து வருகின்றது. கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை இதனை பிரதிலளிக்கின்றது.
எனவே, நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரியவில்லை.
தேசிய மக்கள் சக்தியினரால் ராஜபக்சக்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் போலியானவை என தற்போது நிரூபனமாகிவருகின்றது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள்கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மக்கள் ஆதரவை அரசாங்கம் மேலும் இழக்கக்கூடும்.” – எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.





