Tamil News

விந்தணு மற்றும் முட்டை இல்லாமல் செயற்கை மனிதக்கரு உருவாக்கியுள்ளஆராய்ச்சியாளர்கள்

முட்டை, விந்தணுக்கள் இல்லாமல் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி செயற்கை மனித கருக்களை கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த கருவை சட்ட ரீதியில், 14 நாட்களில் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணின் விந்தணு, பெண்ணின் முட்டை இரண்டையும் எடுத்து சேர்த்து, இன்குபெட்டரில் வளர்த்து கருவானவுடன் குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர் பெண்ணின் கருப்பையில் வைக்கும் ஐ.வி.எப் எனப்படும் வெளிச் சோதனை கருவூட்டல் முறை தற்போது அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பின்னணியிலேயே, இந்த புதிய முறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

How scientists grew the world's first 'synthetic' embryo without eggs or sperm

ஐ.வி.எப் மூலம் கருத்தரிப்பவர்கள் அதிகளவில் எதிர்நோக்கும் கருச்சிதைவு மற்றும் மரபணு கோளாறு ஆகிய பிரச்சனைகளை ஸ்டெம் செல் கருத்தரிப்பில் தாய்மார் எதிர்நோக்க நேரிடாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெம் செல்கள் மூலம் உருவாக்கப்பட்ட இதற்கு துடிக்கும் இதயம் அல்லது மூளை உருவாக்கம் இல்லை. இருப்பினும், அவை நஞ்சுக்கொடி, மஞ்சள் கரு மற்றும் கருவை உருவாக்கும் செல்களைக் கொண்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version