சூரிய ஒளியைத் தடுக்கும் ஆராய்ச்சி: அமெரிக்காவில் புவி வெப்பமடைவதைக் குறைக்க ஒரு புதிய முயற்சி
“காலநிலை மாற்றங்களிலிருந்து நமது பூமியை காப்பாற்ற சூரிய ஒளியை எவ்வாறு தடுப்பது” என்ற ஆராய்ச்சிக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கையின் அலுவலகம், சூரிய புவி-பொறியியல் குறித்த அறிக்கையை வெள்ளை மாளிகை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், சூரியக் கதிர்கள் புவி வெப்பமயமாதலை துரிதப்படுத்துவதால், அவற்றைத் தடுப்பதற்கான வழிகள் குறித்து ஒரு குழு ஆய்வு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய புவி பொறியியல் ஆராய்ச்சிக்கான அனைத்தையும் உள்ளடக்கிய கட்டமைப்பை உருவாக்க 2022 இல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய ஆராய்ச்சி பற்றி, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பூமியின் சிக்கலான அமைப்புகளைப் பற்றிய வளர்ந்து வரும் புரிதலின் அடிப்படையில், சாத்தியமான நன்மைகள் மற்றும் அபாயங்களைக் கண்டறிய ஆராய்ச்சி தேவை.இருக்கிறது.
சூரிய கதிர்வீச்சின் ஒரு பகுதியை மீண்டும் விண்வெளிக்கு திருப்பி விடுவது, சூரிய கதிர்வீச்சை பிரதிபலிக்கும் வகையில் கடல் மேகங்களை பிரகாசமாக்குவது மற்றும் சிரஸ் கிளவுட் ஆய்வுகள் போன்ற வழிமுறைகள் ஆராயப்படுகின்றன.
இந்த ஆராய்ச்சியானது தொழில்நுட்பங்களைக் காட்டிலும் ‘சூரிய கதிர்வீச்சு மாற்றத்தின்’ தாக்கங்கள் பற்றிய புரிதலை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது.
இவற்றில் பெரும்பாலானவை அடிப்படை காலநிலை செயல்முறைகள் மற்றும் “மனித கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகளின்” தாக்கங்கள் மற்றும் காலநிலை கொள்கையின் ஒரு பகுதியாக சூரிய கதிர்வீச்சு மாற்றியமைக்கும் முறைகளின் அபாயங்கள் மற்றும் நன்மைகள் பற்றிய சிறந்த முடிவுகளுக்கு வழிவகுக்கும்.
வரும் காலங்களில், பொது அல்லது தனியார் நிறுவனங்களால் இந்த வழிமுறை (SRM) பயன்படுத்தப்படுவதற்கு அமெரிக்காவை தயார்படுத்தவும் உதவும். இதன் மூலம் சில வருட காலங்களுக்கு நமது கிரகமான பூமியை கணிசமாக குளிர்விக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அந்த ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது