பாகிஸ்தான் பாராளுமன்றில் கடும் எலித் தொல்லை
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எலிகள் புகுந்து அதன் அன்றாட நடவடிக்கைகளை சீர்குலைப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எலி தொல்லையை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசாங்கம் 1.2 மில்லியன் ரூபா பாரிய தொகையை ஒதுக்கியமையுடன் இந்த செய்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பல ஆண்டுகளாக எலிகள் இப்படித் தொல்லை செய்து வருவதாகவும், அவை சாதாரண எலிகளை விடப் பெரியதாக இருப்பதால், அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த எலிகள் பல முக்கிய ஆவணங்களை அழித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 5 times, 1 visits today)