இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகளுடன் பயணித்த எலியால் பரபரப்பு!

கான்பூரிலிருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், எலியொன்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து விமானத்தில் இருந்த 140 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பயணம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் தாமதமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 2.55 மணிக்கு கான்பூர் விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய விமானம் மாலை 06 மணியளவில் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கான்பூர் விமான நிலைய ஊடகப் பொறுப்பாளர் விவேக் சிங், விமானத்தில் ஒரு எலி இருந்ததாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த எலி கண்டுபிடிக்கப்பட்டு விமானத்திலிருந்து அகற்றப்பட்டதா என்பது விரிவாக தெரியவில்லை.
(Visited 1 times, 1 visits today)