மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி! போலீஸார் எடுத்த நடவடிக்கை
மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி போலீஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த 3ம் திகதி முதல் வன்முறை நடந்து வருகிறது.
100க்கும் மேற்பட்டோர் பலியாகிய வன்முறைக்கு பாஜகவின் பிரித்தாளும் அரசியலே காரணம் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்றும் நாளையும் ராகுல் காந்தி மணிப்பூர் செல்ல உள்ளதாக அக்கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இரண்டு நாள் பயணமாக ராகுல் காந்தி இன்று மணிப்பூர் சென்றார். இம்பால் விமான நிலையம் அருகே சோதனைச் சாவடியில் ராகுல் காந்தியின் வாகனத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியிருந்த மக்களை சந்திக்க ராகுல் காந்தி திட்டமிட்டிருந்த நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.