ஆயுதங்களை வழங்குவதால் தைவானின் அழிந்த விதியை காப்பாற்ற முடியாது!
தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா 11 பில்லியன் பெறுமதியான ஆயுதங்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் சீனா எதிர்வினையாற்றியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சீன செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் (Guo Jiakun), தைவான் சுதந்திரத்திற்கு ஆயுதம் வழங்கி உதவுவதன் மூலம் அமெரிக்கா தனக்கு தானே தீவைத்துக்கொள்ளும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
இதனால் தைவானின் அழிந்த விதியைக் காப்பாற்ற முடியாது எனவும் இந்த நடவடிக்கையானது தைவான் ஜலசந்தியை இராணுவ மோதல் மற்றும் போரின் ஆபத்தான சூழ்நிலையை நோக்கித் தள்ளுவதை துரிதப்படுத்துவதாகவும் எச்சரித்துள்ளார்.
தைவான் சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆயுத ஆதரவு, இறுதியில் எதிர் தாக்குதலாகவே முடியும். சீனாவை கட்டுப்படுத்த தைவானைப் பயன்படுத்துவது வெற்றிபெறாது.” எனவும் அவர் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் முந்தைய ஆயுத விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டபோது, பெய்ஜிங் அமெரிக்காவை “நெருப்புடன் விளையாடுவது” என்று எச்சரித்திருந்தமையும் நினைவுக்கூறத்தக்கது.
தொடர்புடைய செய்தி
தைவானுக்கு 11 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா!





