ஜனாதிபதி தேர்தல் – அதிக வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தகவல்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9ஆவது நிறைவேற்று ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் முடிவுக்கு வந்துள்ளது.
இதன்படி, இந்த வருட ஜனாதிபதித் தேர்தலுக்கு 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவர்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 22 பேர் கட்டுப்பணத்தை வைப்புச் செய்துள்ளனர்.
வேறு அரசியல் கட்சி அல்லது சுயேச்சை வேட்பாளர்களாக 18 பேர் கட்டுப்பணத்தை வைப்புச் செய்துள்ளதாக அவர் கூறினார்.
தேசிய தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கையை இது தாண்டியுள்ளது.
2019 ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
(Visited 16 times, 1 visits today)