அமெரிக்கா பயணத்திற்கு முன் கியூபா செல்லும் ஜனாதிபதி ரணில்
இரண்டு பிரதான சர்வதேச மாநாடுகளில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 13 ஆம் திகதி முற்பகல் வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் மற்றும் கியூபாவின் ஹவானாவில் நடைபெறும் ஜீ77 அணி மாநாடு ஆகியவற்றில் கலந்துக்கொள்வதற்காகவே ஜனாதிபதி வெளிநாடு செல்ல உள்ளார்.
முதலில் கியூபாவில் ஹவானா நகருக்கு செல்லும் ஜனாதிபதி ஜீ 77 மாநாட்டில் கலந்துக்கொள்கிறார்.
ஜீ 77 மாநாடு என்பது பொருளாதார ரீதியாக அபிவிருத்தியடைந்து வரும் 134 நாடுகளை அங்கத்துவமாக கொண்ட ஒரு அமைப்பாகும். இலங்கையும் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றது.
இதன் பின்னர், அமெரிக்காவின் நியூயோர்க் செல்லும் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ளார்.
எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி எதிர்வரும் 21 ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.