ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை
ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
நிலநடுக்கம் சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
கெம்சாட்கா (Kamchatka) தீபகற்பத்துக்கு அருகே நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அங்குள்ள கட்டடங்களைத் தீயணைப்பாளர்களும் மீட்புக் குழுவினரும் சோதனை செய்துவருகின்றனர்.
நிலநடுக்கத்துக்குப் பிறகும் அதிர்வுகள் ஏற்பட்டதாக ரஷ்யாவின் புவியியல் சேவைப் பிரிவு அதன் இணையத்தளத்தில் தகவல் வெளியிட்டது.
ரஷ்யாவில் சுனாமி ஏற்படக்கூடும் எனும் எச்சரிக்கையை அமெரிக்காவின் தேசிய சுனாமி எச்சரிக்கை நிலையம் விடுத்தது.
பின்னர் சுனாமி ஏற்படும் அபாயம் குறைந்துவிட்டதாக அது கூறியது.





