ஸ்பெயினில் நடுவானில் கொந்தளிப்பில் சிக்கிய விமானம் – அச்சத்தில் 180 பயணிகள்!
ஸ்பெயினின் விட்டோரியாவிலிருந்து மல்லோர்காவில் உள்ள பால்மாவுக்குப் புறப்பட்டுச் சென்ற ரயான்ஏர் விமானம் நடுவானில் கொந்தளிப்பில் சிக்கியுள்ளது.
இதன்காரணமாக குறித்த விமானமானது சன் சாண்ட் ஜோன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதன்போது விமானத்தில் 180 பயணிகள் பயணித்த நிலையில் அவர்கள் அச்சத்தில் கூச்சலிட்டுள்ளனர்.
அத்துடன் விமானப் பணியாளரில் ஒருவர் காற்றில் தூக்கியெறியப்பட்டு விமானத்தின் கூறையில் மோதியதில் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தின் போது நின்று கொண்டிருந்த பல பணியாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மல்லோர்காவில் ஏற்பட்ட புயல்கள், தலைநகர் அலவாவிற்கும் சியுடாட்டிற்கும் இடையிலான விமானம் அதன் இலக்கை நெருங்கும் போது சிக்கல்களை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.





