இந்தியா

பாகிஸ்தான் பெண் நிருபரை இந்தியாவிலிருந்து வெளியேருமாறு வலியுறுத்தல் …!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை தொகுத்து வழங்குவதற்காக இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் நிருபர் சைனாப் அப்பாஸ் மீது குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.

உலகக்கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்கும் நிலையில் இந்த தொடரை குறித்து செய்தி சேகரிக்க பல்வேறு நாட்டில் இருந்து பத்திரிக்கையாளர்கள் இந்தியாவுக்கு வந்திருந்தார்கள்.

இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பெண் பத்திரிக்கையாளர் சைனாப் அப்பாஸ் ஐசிசி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திலும் பாகிஸ்தான் போட்டிகளை சைனாப் அபாஸ் தொகுத்து வழங்கி வந்தார்.

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் ஆறு வார காலம் என் வீட்டை விட்டு தூரமாக இருக்கப் போகிறேன். 100 கோடி மக்கள் இருக்கும் நாட்டில் அவர்கள் கலாச்சாரத்தை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆசையாக இருக்கிறேன் என்றெல்லாம் சைனாப் ஆபாஸ் பதிவிட்டு இருந்தார்.

ஆனால் சைனாப் அபாஸ் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதில் சைனாப் அபாஸ் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இந்து மதத்திற்கு எதிராக பல கருத்துக்களை கூறி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு பல இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சைனாப் அப்பாஸ் மீது வழக்குத் தொடுக்க போவதாக அறிவித்திருந்தது.இந்த நிலையில் சைனாப் அபாஸ் உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலகி இந்தியாவிலிருந்து நேற்று இரவு புறப்பட்டு துபாய் சென்றடைந்தார்.

முதலில் மத்திய அரசு அவரை நாட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் மட்டும் தான் சைனாப் அபாஸ் இந்தியாவிலிருந்து புறப்பட்டு சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று பாகிஸ்தான் கிரிக்கெட் பத்திரிகையாளர்களுக்கு இன்னும் இந்தியாவுக்கு வர விசா கிடைக்க பெறாத நிலையில் அவர்களுடைய கேள்விகளை வாட்ஸ் அப்பில் மூலம் அனுப்பி அதற்கு பதில் வழங்க பாகிஸ்தான் வீரர்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

 

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே