இலங்கையில் பொலிஸ் நிலையம் அருகே நடத்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

இன்று காலை வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலை 10.30 மணியளவில் வேவா வீதி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் வந்த ஒரு குழு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் அவர்கள் கூர்மையான ஆயுதங்களால் இருவரையும் தாக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொருவர் காயங்களுடன் தப்பினார்.
புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்கள் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் நடந்து வரும் மேல் நீதிமன்ற வழக்கு தொடர்பாக கையெழுத்திட்ட பிறகு திரும்பி வந்துள்ளனர். இறந்தவருக்கு செப்டம்பர் 9 ஆம் திகதி நீதிமன்றத் தீர்ப்பு வரவிருந்தது.
வென்னப்புவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.