அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் ஆலோசனை நடத்தும் நியூசிலாந்து!
அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் மேம்பட்ட இராணுவ தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வது குறித்து ஆலோசிப்பதாகக் நியூசிலாந்து கூறியுள்ளது.
அது ஆஸ்திரேலியாவுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளைத் தொடரும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் மெல்போர்னில் சந்தித்து அண்டை நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து விவாதித்துள்ளனர்.
இதன்போது அமெரிக்க அணுசக்தி தொழில்நுட்பத்தால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியாவுக்கு வழங்க அமெரிக்காவும் பிரிட்டனும் ஒப்புக் கொண்டுள்ளன.
சீனா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பசிபிக் பகுதியில் செல்வாக்கிற்காக போராடுகின்ற நிலையில், மேற்படி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.