வடக்கு கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்!
வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இன்று திங்கட் கிழமை (09.02.2026) நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.
இன்று தொடக்கம் செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





