நாமல் குமார கைது!
சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (01) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் ஒலிப்பதிவினை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு அமைவாக இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு அண்மையில் கொழும்பு பேராயர் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்படத்தக்கது.
(Visited 3 times, 1 visits today)