டக்ளஸ்,பிள்ளையானுக்காக நாமல் களத்தில்!
“புலி டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே டக்ளஸ், பிள்ளையான் போன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார்.
“புலிப் பயங்கரவாதத்துக்கு எதிராக ஜனநாயக வழியில் அரசியலுக்கு வந்தவர்தான் டக்ளஸ் தேவானந்தா.
மக்கள் வாக்கு மூலம் நாடாளுமன்றம் வந்து, வடக்கு மக்களுக்கு அவர் சேவையாற்றியுள்ளார். எனினும், புலி டயஸ்போராக்களை திருப்திபடுத்துவதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே பிள்ளையானும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் ஜனநாயக வழியில் அரசியலுக்கு வந்தவர்கள்.
பல வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட துப்பாக்கி தொடர்பிலேயே டக்ளஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வளவு நாள் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசியல் நிகழ்ச்சி நிரலே அமுலாகின்றது.”எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.





