ஆஸ்திரேலியா கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான பொருள் : அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை!
ஆஸ்திரேலியாவில் ஏராளமான வினோதமான தார் பந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பிரபலமான கடற்கரைகள் மூடப்பட்டன.
வேவர்லி கவுன்சிலுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் (இபிஏ) அதிகாரிகள் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
வேவர்லி மேயர் வில் நெமேஷ்,எங்கள் சமூகத்தின் நல்வாழ்வு மிக முக்கியமானது. அதனால்தான் எங்கள் கடற்கரைகளை மூடுவதற்கு கவுன்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ராண்ட்விக் நகர சபை உள்ளூராட்சிப் பகுதியில் அமைந்துள்ள மேலும் ஐந்து கடற்கரைகளும் தார் பந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பொதுமக்களுக்கு மூடப்பட்டன.
எனினும், Coogee, Clovelly, Maroubra, Malabar மற்றும் Gordons Bay கடற்கரைகள் மீண்டும் திறக்கப்படும் என அதிகார சபை அறிவித்துள்ளது.





